கோச்சடையான் திரை விமர்சனம்
அனைவரைப் போலவும் கொட்சடயானை எதிர்பார்த்து நானும் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தாச்சு படமும் பார்த்தாச்சு. தியேட்டர்லயா? திருட்டு வி சீடிலையா? என்றெல்லாம் கேட்க்க கூடாது..
முதல் மோஷன் தொழிநுட்பத்தில் அமைந்த தமிழ் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு கொச்சடயானுக்கு இருந்தது. சரி கதையை பார்த்துவிட்டு விமர்சனத்துக்கு வரலாம்.
முதல் மோஷன் தொழிநுட்பத்தில் அமைந்த தமிழ் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு கொச்சடயானுக்கு இருந்தது. சரி கதையை பார்த்துவிட்டு விமர்சனத்துக்கு வரலாம்.
கோட்டைப்பட்டினம் - கலிங்கபுரி இரு நாட்டின் அரசர்களுக்கு இடையே நடக்கும் ராஜாங்கப் போட்டி தான் படத்தின் கதை. வீரமும் கூர்மை யான அறிவும் கொண்ட ராணாவைத் தனது தளபதியாக கலிங்கபுரி மன்னர் நியமிப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. கலிங்கபுரியில் அடிமைகளாக இருக்கும் கோட்டைப்பட்டினத்துப் போர் வீரர்களை மீட்டு, கோட்டைப் பட்டினத்திற்கு அழைத்துவருகிறான் ராணா. கோட்டைப்பட்டினத்துத் தள பதியாக நியமிக்கப்படும் அவனுக்கு மறைமுகமான செயல்திட்டம் ஒன்று இருக்கிறது. அவன் அப்பா கோச்ச டையானின் வரலாற்றில் அதற்கான ரகசியம் இருக்கிறது.
தந்தைக்காகப் பழிவாங்குவது, கலிங்கபுரியின் படையெடுப்பிலிருந்து கோட்டைப்பட்டினத்தைக் காப்பாற்று வது, கோட்டைப்பட்டினத்து மன்னர் ராஜகோடகனின் (நாசர்) எதிர்ப்பை மீறி இளவரசி வதனாவை (தீபிகா படுகோன்) கரம் பிடிப்பது ஆகிய சவால்களை ராணா எப்படிக் கையாள்கிறான் என்பதுதான் இந்தத் தொழில்நுட்பப் பரிசோதனைக் களத் தின் கதை. இடையில் கோச்சடை யானின் பின்கதையும் இளவரசன் செங்கோடகன் (சரத்குமார்) ராணாவின் தங்கை (ருக்மிணி) காதல் என்னும் கிளைக்கதையும் உண்டு.
மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் படத்தை உருவாக்க சௌந்தர்யா ரஜனிகாந்தின் முயற்சியை மட்டும்தான் பாராட்டலாம். ஆனால் அது மெச்சத்தக்க விதத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறதா என்றால் இல்லை. எந்தக் கதாபாத்திரத்தின் கண் அசைவுகளும், உடல் அசைவுகளும் திரையில் பொருந்தவில்லை. குறிப்பாக சரத்குமாரின் குரலைக் கேட்டுத் தான் அவரை அடையாளம் தெரிந்து கொள்ள முடிகிறது. ரஜினி கதாபாத்திரத்தை உருவாக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்ட மற்றெந்தக் கதாபாத்திரங்களுக்கும் கொடுக்கப்படவில்லை. நாகேஷின் கதாப்பாத்திரம் ரஜனியின் கதாபாத்திரத்திற்கு அடுத்ததாக நேர்த்தியாக உள்ளது. ஏனோ தெரியவில்லை ரஜினி உற்பட அனைத்து கதாபாத்திரங்களும் பைல்ஸ் வந்தவர்கள் போல கால்களை அகட்டிக்கொண்டு நடக்கிறார்கள்.
கே.எஸ்.ரவிக் குமாரின் வசனம் படத்திற்கு ஓரளவிற்கு வலு சேர்க்கிறது. ‘வாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக் கொள்ள வேண்டும்’, ‘எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு; முதல் வழி மன்னிப்பு’ இப்படியான வசனங்கள் ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் உள்ளது.ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையை அற்புதமாகக் கொடுத்திருந்திருக்கிறார். பாடல்களும் நன்றாக உள்ளன. ஆனால், படத்தில் தேவையில்லாமல் பாடல்கள் வருவதும், பாடல்களுக்கு கதாபாத்திரங்களின் நடன அசைவுகளும் உதடு அசைவுகளும் பொருந்தாமல் இருப்பதுதான் பின்னடைவு.
ஹாலிவூட் மோசன் தொழிநுட்பப படங்கள் அளவில் இல்லாவிட்டாலும், ஓரளவில் பரீட்சாத்து முயற்சியாக இதனை கொள்ளாலாம். ஆனால் ஜினி படத்திற்கு இருக்கும் ‘மாஸ்’ வரவேற்பை மோஷன் கேப்சர் மூலம் கோச்சடயான் கொண்டுவரத் தவறி விட்டது என்பது மட்டும் உண்மை.
பிற்காலத்தில் எந்த ஒரு கலைஞனையும் நாம் கற்பனை ரசவாதத்திற்குள் அழகாக உருவம் கொடுத்து சினிமாவாக்க முடியும் என்கிற முயற்சியை இதன் மூலம் விதைத்திருகிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் இந்த தொழில்நுட்ப வடிவத்தில் மீண்டும் நடிக்க வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
0 comments:
Post a Comment