CVMaker ( Resume Maker ) வேலை பெற்றுத்தரும் பயோடேட்டா சில நிமிடங்களில் உருவாக்கலாம்.


நம் படிப்பு, திறமை எல்லாம் பெரிய அளவில் இருந்தாலும் நம்மிடம்
இருக்கும் அனைத்தையுமே வெளியே காட்டும் ஒரு பேப்பர் தான்
இந்த பயோடேட்டா. எதை எப்படி எங்கே எடுத்துக்கூற வேண்டும்
என்று தெரியாமல் பலருக்கு பெரிய வேலை வாய்ப்பை
கிடைக்காமல் போகிறது. இவர்களுக்கு சில நிமிடங்களிம் Professional
Resume  உருவாக்குவதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


எதை செய்தாலும் நாம் சொல்லும் ஒரே வார்த்தை நேரம் இல்லை
என்பது தான் ஆனால் பல மணி நேரம் செலவு செய்தாலும் ஒரு
திறமையான பயோடேட்டா உருவாக்க முடியவில்லையே என்பது
தான் இந்தப்பிரச்சினையை நீக்கி நமக்கு வெற்றி தரும்
பயோடேட்டாவை உருவாக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி:  http://cvmaker.in
இந்தத்தளத்திற்கு சென்று  நம்மைப்பற்றிய விபரங்களும் நம் கல்வி,
அனுபவம் போன்ற சில கேள்விகளுக்கு சரியான பதிலை பதிலை
கொடுத்தால் போதும் சில நிமிடங்களில் அழகான பயோடேட்டாவை
நமக்கு உருவாக்கி கொடுக்கிறது. எந்த இடத்தில் நம் அனுபவம்
திறமை போன்றவற்றை காட்டவேண்டும் என்று சரியாக காட்டி
நம் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. நாம் உருவாக்கும் Resume-ஐ
PDF கோப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
வேலை தேடுபவர்களுக்கும் , பெரிய நிறுவனங்களில் வேலைக்காக
முயற்சித்து கொண்டிருப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
பதிவு பயனுள்ளததாக இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் ..
                                                   
                                                                                                  

0 comments:

Post a Comment